Wednesday, August 3, 2011

தர்மபுரி குமாரசுவாமிபேட்டை அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி கோவிலின் சிறப்பு:


வணக்கம் நண்பர்களே,

தர்மபுரி குமாரசுவாமிபேட்டை அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி கோவிலின் சிறப்பு: 

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும்- செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்
ஆதலாற்  வானோரும்  ஆனைமுகத்தோனை
காதலாற் கூப்புவார்    தம்கை .                       

ஸ்தோத்திரம்:

முஷிக வாகன  மோதக ஹஸ்த,
சாமள கர்ண விளம்பித  சூத்திர,
வாமன ரூப   மகேஸ்வர  புத்ர,    
விக்ன வினாயக பாத நமஸ்தே,

பிள்ளையார் தரிசனம்:


அழகான நிமிர்ந்த கம்பிரமான ராஜகோபுரத்தை இங்கு காணமுடியும்,


முலாலைய கோபுரம் மற்றும் பின் கோபுரம் இணைந்த காட்சி இது,




அழகான பின் கோபுரம் தரிசனம்,



அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி:


கோவிலின் முன்புறத்தில் அழகிய நுழைவாயில் அங்கு இருந்துந்தபடிய வலப்புறம் பார்த்தல் செல்வவிநாயகர் கோவிலும், இடப்புறம் பார்த்தல் மாரியம்மன் கோவிலும் பார்க்கமுடியும், நுழைவாயிலை சற்று கடந்து சென்றால் காவடி கோவிலும் பார்க்கமுடியும்,   காவடி கோவிலின் சிறப்பை பின்பு விரவாக மற்றும் தெளிவாக பார்க்கலாம் ,

தர்மபுரி குமாரசுவாமிபேட்டை அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருகோவில் நுழைந்த உடன் நேராக பார்த்தல் தருமபுரியை ஆட்சி பன்னும் நமது ராஜா சிவசுப்ரமணிசுவாமியை பார்க்க முடியும், இவரை நாம் பார்க்கும் விதத்தில் கட்சி குடுப்பாரு உதாரணமாக நண்பராக பாத்தால் நண்பராகவும், தெய்வமாக பார்த்தல் தெய்வமாக கட்சி கொடுப்பார் இவர், 


* வலதுபுறம் பார்த்தல் அவரின் அப்பா தாண்டவ கோலத்தில் ஆனந்த  நடராஜராக காட்சி கொடுக்கிறார்,



* இடப்புறமாக பார்த்தல் மாமனார் சென்னகேசவ பெருமாளாக காட்சி கொடுக்கிறார்,


* ஒரே நேரத்தில் முவரையும் பார்ப்பது இந்த கோவிலின் சிறப்பு ஆகும்,
* பக்கத்தில் துர்கை அம்மனனுக்கு தனி கோவில் உண்டு,

* தர்மபுரில் பெரியகோவில் என்று அனைவராலும் அழைக்கப்படும் கோவில் அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருகோவில் ஆகும், 
கோவில்களில் அன்னதானம் வழங்கவேண்டும் என்ற அறிவிப்பை தமிழக அரசு அறிவித்த முதல் அறிவிப்பிலே நமது கோவில் இடம் பிடித்தது என்பது பெரிமையான செய்தி,

தினம் தினம் மூன்று வேலை பூஜைகள் நடைபெருகியது,
மாதம் மாதம் சஷ்டி & கார்த்திகை, அன்று சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் , சுவாமி திருவீதி உலா சிறப்பாக நடைபெறுகிறது,
வருடம் வருடம் நடைபெறும் பெருவிழாகளும் நடைபெறுகிறது,

* தைப்பூசம், 
* கந்தசஷ்டி,
* பங்குனி உத்தரம்,

விழாகளும் சிறப்பாக நடைபெறுகிறது,

அதுமட்டும் இல்ல ஆனந்த நடராஜருக்கு ஆண்டுக்கு இருமுறை மட்டும் சிறப்பாக  விழாகளும் நடைபெறுகிறது,

* ஆனி திருமஞ்சன திருவிழாவும்,


* ஆருத்தர திருவிழாவும்,


* மாதம் இருமுறை பிரதோஷம் நடைபெறுகிறது,
* வருடத்தில் ஆறு அபிசேகம் சிறப்பாக நடைபெறுகிறது,

சிறப்பாக நடைபெறுகிறது,

அதுமட்டும் இல்ல செனகேசவ பெருமாள் சுவாமிக்கு  சிறப்பான திருவிழாகளும் நடைபெறுகிறது,

* ஸ்ரீராமநவமி திருவிழாவும்,
* வைகுண்டஏகாதசி திருவிழாவும்,


* மாதம் மாதம் ஏகாதசி சுவாமி திருவிதி உலாவும் நடைபெறுகிறது,

கோவில் பரிகாரத்தில் நிருதி விநாயகர் சன்னதியும், வீரபதரசுவாமி சன்னதியும், சண்டிகேசவர் சுவாமி சன்னதியும், நவகிரக சன்னதியும், இடுமன் சன்னதியும் இருக்கிறது,

* பரிகாரத்தில் இருக்கும் நிருதி விநாயகருக்கு மாதம் மாதம் சங்கடசகுர்த்தி பூஜையும் சிறப்பாக நடைபெறுகிறது,



* இடுமன் சுவாமிக்கு மாதம் மாதம் சஷ்டி அன்று சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடை பெறுகிறது,

கோவிலுக்கு எதிரே கோவிலுக்கு சொந்தமான தெப்பகுலம் உள்ளது,


இதுவே எனக்கு தெரிந்த வரை கோவிலின் சிறப்பு மற்றும் ஸ்தல வரலாறு ஆகும்,

தொடரும்..

2 comments:

  1. நல்ல விசயம்.தொடர்ந்து செய்யுங்க. படங்களை இன்னும் கொஞ்சம் வரிசைப்படுத்தி, அழகா வெளியிடுங்க. சந்தேகங்களுக்கு சசிகுமார் ப்ளாக் பாருங்க...இல்லைனா அவருக்கு மெயிலனுப்பி கேளுங்க. அப்பிடியே நெசவாளர் காலனில இருக்கிற மெஸ்கள் பத்தியும் எழுதுங்க தலைவர்.நன்னி.

    ReplyDelete
  2. சரிங்க நண்பரே :)):)))

    ReplyDelete